The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for my blog.
Here’s an excerpt:
A San Francisco cable car holds 60 people. This blog was viewed about 1,400 times in 2011. If it were a cable car, it would take about 23 trips to carry that many people.
எனக்கு பெண்பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டார்கள் போல! வழக்கம் போல் குழப்பமே மனதில் நீடித்து இருக்கிறது! இன்னும் ஒரு ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து சிந்திக்கலாமா என்று தோன்றுகிறது. இருக்கட்டும் என்று இந்த பதிவு!
காலையே எனது ஒன்று விட்ட (கன்னத்தில் அல்ல) சகோதரி தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க ஆரம்பித்துவிட்டாள். எனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க எங்கள் பந்துக்களிலேயே பெண் பார்க்கலாம் என்று திட்டம். என் தந்தை என்ன கூறுகிறாரோ அதுவே என் முடிவு! (மறு பரிசீலனை விவாதங்கள் உண்டு) பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
பொதுவாக எனக்கு ஜாதகம், பொருத்தம் இவற்றில் நம்பிக்கை இல்லை! என் சகோதரிகளுக்கு வரன் பார்க்கும் போது நாங்கள் விவாதித்த விஷயங்கள் பல நினைவிற்கு வருகிறது. என் அத்திம்பேர் இருவருமே நல்ல “பையன்கள்” எனும் வரையறைக்குள் வருபவர்கள். நானும் அவ்விதமே என்று நினைக்கிறேன்!
இல்லற வாழ்விற்கு இன்றியமையாதது நல்ல மற்றும் ஒத்த கருத்துணர்வு மற்றும் சிந்தனை மட்டுமே.
நீண்ட சிந்தனைக்குப்பின் இந்த பதிவினை பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எழுதுகிறேன். இந்த பதிவு பெண் மற்றும் பெண்ணை பெற்றோர் படித்து அறிந்து கொள்ளவே! (ஒரு விதத்தில் பார்த்தால் ‘என்’ குடும்பத்தினருக்கும்)
எனது தொழில் மற்றும் செயல்பாடுகள் பற்றி சுலபமாக கூகிளில் தேடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். (உம்:search: Raman Azhahia Manavalan in Google)
என்னைப்பற்றி இன்னும் அதிகமாக அறிய மிகவும் சுலபம் எனது சகோதரிகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் எனது தந்தையிடம் இருந்து பெறலாம்.
எனது நிதி நிலைமை, வருங்கால திட்டம், எங்கள் நிறுவனம் பற்றிய விபரங்கள் நேரிடையாக என்னையே தொடர்புகொண்டு பெறலாம். (என்னை தொடர்பு கொள்ளுதல் என்பது கடைசியான செயல்பாடாக இருந்தால் நன்று, முதலில் என் குடும்பத்தினரை பற்றி அறிதல் அவசியம்) என்னைப்பொறுத்தவரையில் பரஸ்பர புரிதல் முக்கியம்.
கண்டிப்பாக தனியான ஒரு ஜாதக விபர அறிக்கை தரப்படமாட்டாது. இது பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டே கூறுகிறேன்.
என் புகைப்படம் முதலான இன்ன பிற சமாச்சாரங்கள் இன்டர்நெட்டில் உள்ளது (Linked In, Face Book, Twitter ) பார்த்துக்கொள்ளலாம்.
பிடித்திருந்து (இரு வீட்டிற்கும், என் சகோதரிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும்) அடுத்த கட்டம் போவதற்கு முன் நான் அந்த பெண்ணிடம் குறைந்தது மூன்று முறை நேரடியான சந்திப்பு அவசியம். (இதற்கு முன் அவ(ர்க)ளது பெற்றோரும் என் பெற்றோரும் ஒரு முறை சந்தித்தால் நன்று)
நேரடியான சந்திப்பிற்கு பின் குறைந்தது ஐந்து முதல் பத்து மாதங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், தொலைபேசி, இணையம், நேரடியான சந்திப்புக்கள் அவசியம்.
எனவே குறைந்தது ஒரு வருட காலம் புரிதல், பழகுதல் அவசியம். (இவையனைத்துமே இருவீட்டார் சம்மதம் (திருமணத்திற்கான), பெண்ணின் விருப்பம் (பொதுவான) பெற்ற பின்னரே.
இவையெல்லாம் கண்டிஷன்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
வரதட்சிணை வாங்கிக்கொள்ளப்பட மாட்டாது! (மீறி கொடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும்!!! ஹா ஹா ஹா ! என்ன கொடுமைடா இது!) என் பெற்றோரின் விருப்பமும் அதுவே!
பெண்ணிற்கு அலுவல் செல்லும் விருப்பம் வேண்டும். அவர்களது தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் வண்ணம் இருத்தல் நலம். (நேரில் சந்திக்கும் போது இதுபற்றிய விவாதம் உண்டு).
என்னுடனான உரையாடல்கள், விபரங்கள் அனைத்துமே குடும்ப நலன் கருதி மிகவும் ரகசியம் பேணவேண்டியது அவசியம். (குழப்பம் வேண்டாம்! என்பதற்காகவே!)
எல்லாவற்றிக்கும் மேலாக என் வாழ்க்கை முழுவதும் உடன் வருபவர் பற்றி நானும் அறிய வழி வகை செய்ய வேண்டும்.
சம்பத்தப்பட்ட பெண்ணும் இதே போன்று விருப்பங்களை பட்டியலிட்டு எனது பிரத்யேக மெயில் ஐடிக்கு அனுப்பலாம். தனி நபர் ரகசியம் காக்கப்படும்!!! << manoigr@gmail.com >> விருப்பம் இருந்தால் அலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம். (+91-9486467049)
முதலில் நன்றி ட்விட்டர் நண்பர் திரு. ஸ்கேன் மேன் மற்றும் குழும நண்பர்களுக்கு. நான் இந்த பதிவினை எழுதுவது எனது மனப்பாரத்தினை குறைத்துக்கொள்ளவே!
கடந்த 27ஆம் தேதி தான் என் சகோதரிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலம் என்று நினைத்திருந்த நேரத்தில் திடீரென்று ஓர் அதிர்ச்சி செய்தி. குழந்தையின் நுரையீரல் செயலாற்றும் வேகத்தின் அளவு குறைந்திருக்கிறது என்று.
மனம் மிகுந்த பாரத்துடன் இருப்பது போன்ற உணர்வு. வாய் விட்டு அழவும் முடியாமல், வந்த கண்ணீரை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்க நெற்றியில் அமிர்தாஞ்சன் ரோல்ஆன் தடவி கண்ணில் வந்த காண்ணீருக்கான செயற்கை அர்த்தம் தந்து விட்டு எனது மீட்டிங்கினை தொடர்ந்தேன்.
எனது வாழ்வில் என் சகோதரிகள் பங்கு அளப்பரியது. அவளுக்கு ஒரு வேதனை என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது,. ஆனால் அவளுக்கு தான் எத்தனைஅடுக்கடுக்கான சோதனைகள்.. இறைவா..
பிறந்த குழைந்தைக்கு ஏற்பட்டிருந்ததன் மருத்துவ பெயர் “Persistence Pulmonary Hypertension of the Newborn”எனது தந்தை மூலம் நான் அறிந்தேன்.அது பற்றிய விபரம் இணையத்தில் எனக்கு புரியும் வகையில் கிடைக்காமல், ஒன்றும் புரியாமல் மனம் ஒருங்கே செயல்பட மறுக்க, நெட்டில், பிறந்த குழந்தையின் நுரையீரல் பற்றிய விபரங்கள் சேகரிக்க ஆரம்பித்தேன்.
என்னதான் படித்திருந்தாலும், விபரம் தெரிந்திருந்தாலும் துன்பம் அல்லது எதிர்பாராத ஒன்று நிகழும் போது நமது செயல்பாடுகள் நம்மை மிகுந்த குழப்பத்திற்குள் ஆழ்த்தும்.
இணையத்தில் தேடிப்பார்த்த விபரங்கள் “அபாயம்” இல்லை என்று நம்பிக்கை கூறினாலும் என்னால் முழுமையான ஒரு நிலைப்பாட்டிற்கு வர முடியவில்லை. குழப்பத்தில் இருக்கும்போது நினைவிற்கு வந்தார்” ஸ்கேன்மேன்”.
அக்கப்போருக்கு மட்டுமா இணையமும் த்விட்டரும்? இதற்கு ஏதாவது விடை கிடைக்குமா என கேட்டவுடன் உடனடியாக பதில் தந்து உதவினார் ஸ்கேன்மேன். அவரது உடனுக்குடனான த்வீட்டுகள் மற்றும் அவர் பரிந்துரைத்த நபர்கள் திரு. ராஜ் மோகன் மற்றும் திரு. ஜாவீத்இப்ராஹீம் ஆகியோர் உடனுக்குடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ள எனக்கு குழந்தையின் அபாயநிலை புரிய ஆரம்பித்தது.
திருவாரூர் வெங்கடேஸ்வரா மருத்துவமனையின் மருத்துவர் திரு. வெங்கடேஷ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் நிலையினை மேம்படுத்த செய்யவேண்டியது குறித்து நானும் எனது தந்தையும் விவாதித்தோம். அவரும் அவர்களால் முடிந்த வரையில் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் 25 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தக்க நேரத்தில் தகவல் தந்து எனக்கு ஓரளவிற்கு ஒரு புரிதலை ஸ்கேன்மேன் ஏற்படுத்தியிருந்ததால் எனக்கு நானே ஆறுதல்படுத்திக்கொள்ள முடிந்தது.
இந்த வகை சுவாசப்பிரச்சினை ஆயிரம் குழைந்தகளில் ஒருவருக்கு வருவதுண்டு எனவும் சுவாசப்பையின் இயக்கத்தை சீர்படுத்த பிராண வாயுவுடன் “நைட்ரஸ்ஆக்சைட்” செலுத்த வேண்டும் எனவும் அந்த வசதி சென்னை, பெங்களுர் மற்றும் திருவனத்தபுரத்தில் மட்டுமே இருப்பதாக கூறினர். பிறந்த குழந்தையை அவ்வளவு தொலைவு எடுத்து செல்ல “வெண்டிலேட்டர்” கொண்ட ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பிழைக்க வைக்கக்கூடிய விழுக்காடு குறைந்துகொண்டே வருவதாகவும் கூறினர்.
எனது தந்தையும் நானும் கலந்து பேசி குழந்தைக்கு நம்மாலான முயற்சி மற்றும் மருத்துவருக்கு ஒத்துழைப்பு அளிக்க முடிவு செய்து அவர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்கி தர ஆரம்பித்தோம்.
எங்கள் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் மதியம் மணி சுமார் 03:20 அளவில் குழந்தையின் சுவாசம் அனைத்தும் நின்று “லோகமாயா” போன்று எங்கள் நெஞ்சில் உதைத்து சென்று விட்டாள்!
ஆம் என்னை பொருத்தவரை அவள் ஒரு “லோக மாயா” தான் எப்படி கம்சன் நெஞ்சில் உதைத்து மாயையை விளக்கி சென்றாளோ அதே போல் ஏதோ ஒரு மாயையை விளக்கவே அவள் எனது சகோதரியின் வயிற்றில் வந்துதித்து அநேகம் பிரபந்தம், சகல ஸ்தோத்திரம் அனைத்தையும் கேட்டு, பிறந்த பின் நன்கு தாய்ப்பால் அருந்தி, அனைவர் முகம் பார்த்து சிரித்து அழுது பின் எங்களையும் அழவிட்டு சென்றிருக்கிறாள் போல….
குறிப்பு:
கர்ப்பம் தரித்ததுடன் மற்றும் அவ்வப்போது செய்யும் ஸ்கேன் களின் விபரம் முழுமையாக தெரிந்து கொள்வது நன்று. பெரும்பாலான மருத்துவர்கள் இதன் மேல் அதிகம் விவாதிப்பதில்லை.
எனது முதல் சந்தேகமே பெங்களூரில் ஸ்கேன் செய்து முதற்கட்ட ஆலோசனை தந்த மருத்துவரின் அஜாக்கிரதையாக இருக்கோமோ என்று! என்னிடம் ஸ்கேன் சிடி உள்ளது நேரம் இருந்தால் ஸ்கேன்மேன் (திரு. விஜய்) அவர்களிடம் கொடுத்து ஆய்வு செய்யலாம் என்றிருக்கிறேன்.
Persistent Pulmonary Hypertension of the Newborn (PPHN) – வீடியோ
மேலும் மேலே தந்துள்ள வீடியோ PPHN பற்றி முழுமையாக விளக்கும் என்று நம்புகிறேன்.
குழந்தை சீம்பால் அருந்திய பின் டையாப்பரில் குழந்தையின் மலம் இருந்ததாகவும், பிறக்கும்போது குழந்தை மலம் வெளியேற்றியதாகவும் தெரிகிறது. சம்பத்தப்பட்ட மருத்துவர் இது பற்றி ஏதும் கூறாத நிலையில், நான் சக நண்பர்களின் துணை கொண்டு இது பற்றிய மேலதிக விபரங்கள் சேகரித்து இந்த நிகழ்வின் சரியான காரணம் அறிய உள்ளேன். என் மாயாவிற்கு ஆனது போல் வேறெந்த குழந்தைக்கும் இந்நிலை நேரக்கூடாது.
Today i have attended a full day session organized by NIFT Tea Fashion Institute on “REACH” awareness and “Six Sigma” programs. The session was jointly organized by NIFT Tea and a cluster developing company ACDS. The event was well received by audiences.
While addressing in the session Mr. Raja Shanmugam of NIFT Tea emphasized the need of “Change” in the way we approach the problems. He further shared the initiatives of institute to resolve on various issues associated with the business in this cluster. Mr. Dhananjayan Auditor by profession who also shared the podium as chief guest and wished the institute for the initiatives.
I took few snaps! As the photographer failed to reach at right time, Mr. Siva (VP) asked me to take some snaps, (with the belief that i can take good pics)! Here are few snaps…
The Glimpse of Event:
A Glimpse of the Participants
A Glimpse of the Participants
A Glimpse of the Participants
A Glimpse of Participants
Hush.. Hush…
Principal of NIFT Tea Addressing
A Glimpse of Podium
Mr. Raja Shanmugam addressing the gathering
Representative from ACDS
Mr. Shekhar is receiving certificate – Here onwards Tighten the Belt!
Mr. Siva (VP) is receiving the Certificate of appreciation