Archive for General (பொது)

தீபாவளி: என்ன கொடுமை இது!!??

தீபாவளி என்றாலே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளுவது வழக்கம். ஆனால் இந்த முறை சிறு வயதில் அடைந்த உற்சாகம் இந்த முறை எழவில்லை. முன்பெல்லாம் தீபாவளிக்கு பல நாள் முன்பே பட்டாசு வாங்கப்பெற்று அதை நான்கு பங்குகளாக பிரித்து அதை கண்ணும் கருத்துமாக வெயிலில் காய வைத்து பின் தீபாவளி வரும் வரையில் எதிரிகளிடம் இருந்து அதாவது எனது சகோதரிகளிடமிரிந்து பாதுகாத்து, தீபாவளி அன்று யார் முதலில் சரம் வைப்பது என்ற போட்டியில் தொடங்கி, அடுத்த வீட்டு அண்ணன்கள் வைக்கும் வெடிகளுக்கு பயந்து இறுதியில் ஒரு வழியாக பட்டாசுகளை காலி செய்து விட்டு, அடுத்த கட்டமாக ஆசி பெற்று வசூல் செய்ய என்று தீபாவளி அன்று எங்களது plan அமையும்.

ஆனால் இந்த முறை மேற் சொன்ன எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் , காலை சன் டீவியின் மங்கல இசையுடன் தொடங்கி இறுதியில் எல்லா சேனல்கலையும் அலசி அனைத்தையும் பார்த்து இறுதியில் மூளை குழம்பி மிகவும் கஷ்டப்பட்டு தூங்க சென்றேன்.

 

மொத்தத்தில் பண்டிகைகளுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு புரியவில்லை. இப்படியே சென்றால் வார விடுமுறைகளையும் விளம்பரங்களுக்கும் சினிமா கலைஞர்களுக்கும் தாரை வார்த்து, விளம்பரங்களுக்கிடையே சிறிது நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பும் நிலை வந்தாலும் வரலாம். 

Leave a comment »

தாயிற் சிறந்தததொரு கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தமிழ் மொழி பொல இனிது எதுவும் இல்லை…

நீண்ட நாளது ஆசை இன்று இனிய தமிழ் மொழி ஊடகம் மூலம் நிறைவேறியது. பொதுவாக தமிழில் எழுதுவது என்பது இனிமையான ஒன்று.  என் பெயர் இரா. அழகியமணவாளன், துய தமிழ் பெயர். பள்ளிக்காலம் தொட்டே எனது பெயர் மூலம் நான் பலருக்கு பரிட்சயம் ஆனதுண்டு. இருப்பினும் பெயரை விட இலட்சியத்தை அடைந்து பெயர் பெறவே நான் விரும்புகிறேன். எனது வாழ்க்கை குறிப்பில் முக்கிய இடம் எனது பெற்றோருக்கும் எனது சகோதரிகளுக்கும் எப்பொழுதும் உண்டு. எனது  சொந்த  கதையை இங்கு அதிகமாக பிரஸ்தாபிக்க நான் விரும்பவில்லை. இந்த ஊடகம் மூலம் நான் பொது, அறிவியல், சமூகம், தத்துவம் இவற்றுடன் எனது துகிலியல் பற்றியும் இங்கு கிறுக்க சித்தமாயுள்ளேன். இதற்கு உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்.

Leave a comment »