Archive for Uncategorized

முடிகொண்டான்

முடிகொண்டான் இயற்கையில் அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத ஆனால் ஆர்ப்பாட்டம் நிறைந்த மனிதர்களை பெற்ற ஒரு கிராமம். 1950 களின் பிற்பகுதிகளில் பிராமண பண்ணையார்களின் ஆதிக்கம் நிறைந்து பின் 1990 முதல் பிராமண பண்ணையார்களின் நிலங்களை விலைக்கு பெற்ற பிற பிராமணர் அல்லாத பண்ணையார்களின் ஆதிக்கம் தொடர்கிறது. இதனால் சாதாரணமான மக்களின் நிலைப்பாடுகளில் எந்த ஒரு பெரிய மாற்றமும் எற்படவில்லை. இந்தியாவின் பிற கிராமங்களை போன்றே சுயநல அரசியல் வாதிகளும், வாங்கும் சம்பளத்திற்கு 40% (விழுக்காடு)மட்டுமே வேலை பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் (இவர்களின் இந்த 40%இல் இந்த உலகுக்கு கிடைத்த ஒரு சிந்தனையாளன் (இப்படித்தான்  )  தான் நீங்கள் படிக்கும் இந்த கிறுக்களுக்கு சொந்தக்காரன்), படித்த பின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாத அக்மார்க் கிராமத்தான்களும் நிரம்பி (!?) வழியும் கிராமம் தான் எனது ஊர்.

பள்ளிக்கூட வாழ்க்கை என்பது இந்த கிராமத்து குழந்தைகளுக்கு – கடலில் வீசப்பட்ட மரத்துண்டு போல. ஆம் மரத்துண்டு வெற்றிகரமாக கரை கண்டால், இங்கு கடலோ அல்லது மரத்துண்டோ வெற்றியை யாருக்கும் தன் வெற்றியை ஸமர்ப்பிக்க முடிவதில்லை ஏன் என்றால் இது இயற்கையாக நடக்கும் செயலாகும்.

இப்படிப்பட்ட பெருமை (!!??) வாய்ந்த ஊரில் நான் பார்த்த/ அனுபவித்த நிகழ்ட்சிகளை இங்கு தொகுத்தளிக்க உள்ளேன். .

Leave a comment »

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Comments (1) »