நீங்கள்  பைக் வைத்துள்ளீர்களா? அடிக்கடி “வ்ர்ர்ருரும்ம்” ‍”வ்ர்ர்ருரும்ம்” என முறுக்குவீர்களா? சிக்னல்களில் நிற்கும் போது தேவையில்லாமல் ஆக்சிலரேட்ட்ரை திறுகுவீர்களா?

வீர்கள்” என்றால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய என்ட்ரி இது!

சமீபத்தில் ஜப்பானில் நடத்த்ப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு அதிர்ச்சி தரலாம்!

பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் சிக்னல் வந்தால் வண்டியை ஆப் செய்யாமல் ஆக்சிலரேட்ட்ரை முடுக்குவதுண்டு. மேலும் 30 – 40 வினாடிகள் நிறுத்தத்தில் நிற்கும் போது மொத்த வாகனத்தில் இருந்து வெளியேறும் பார்டிகல்சின் (PArticles) concentration ரொம்பவும் அதிகமாக இருப்பதை சில ஆராய்ச்சி மூலம் அறிந்துள்ளனர். இது என்ன நமக்கு தெரியாத என்று நீங்கள் சொன்னால் அடுத்த முறை நீங்கள் உங்கள் வாகனத்தை ஆப் செய்து விட்டு நில்லுங்கள் அல்லது Neutral லில் வையுங்கள். உங்கள் எரிபொருளையும் சேமிக்கலாம் சுற்றுப்புரத்துக்கும் நன்று.

இது மட்டும் இல்லை டிராபிக் கிளியர் ஆனவுடன் முந்தி செல்லும் அவசரத்தில் நாம் முடுக்கும் போது 1.6 X 10^5 particles per cubic cm அளவு Pollution ஆகிறதாம். இது சுமார் 10-45 வினாடி வரை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வாரம் என் திருப்பூர் நண்பர் ஒருவரிடம் இதை பற்றி தெரிவித்த போது அவர் இப்படி கூறினார், “இதெல்லாம் ஜுஜுபி சார், நம்ம  ஊர் (திருப்பூர்) பாருங்க  கரும்புகையை எப்போதும் கக்கும் பாய்லர்களை”

Advertisements