Tags

, , , , , , , ,

மூன்று நாள் விடுமுறை – கடைசி வரை நடக்குமோ நடக்காதோ அல்லது அழைப்பார்களோ மாட்டார்களோ என்று இருந்த கலந்தாய்வு கூட்டங்களினால் முன் பதிவு செய்யாமல் பயணம் செய்ய நேரிட்டது. கோவையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாலை ஏழு மணிக்கே கூட்டம் கலை கட்டியது. அநேகம் பேர் கல்லூரி மாணவ மணிகள். ஜெகஜோதியாக பேருந்து நிலையம் இருந்தாலும் கூட்டத்தை பார்த்த உடனேயே எனக்கு திகில் பற்றிக்கொண்டது.

நல்ல விஷயம் கோவை மக்களிடம் காணப்பெற்றேன், மூன்று தடங்களுக்கான பேருந்து சேவைக்கு மக்களே வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர், பிறகு காவல் துறையினர் வந்து சீர் செய்ய ஒவ்வொரு பேருந்து வர வர வரிசைப்படி அனைவரும் ஏறினர். திருச்சி வரிசையைக்காட்டிலும் மதுரை மற்றும் தென் மாவட்ட வரிசை அனுமார் வால் போல வளைந்து நீண்டு சுற்றி நிலையத்தின் வெளியேயும் நீண்டிருந்தது. அவ்வபோது அவர்களை பார்த்து திருப்தி பட்டுக்கொண்டிருந்தேன். நல்ல வேலையாக ஒரு மணிநேர காத்திருப்புக்குப்பின் திருச்சி செல்லும் பேருந்தில் இடம் கிடைத்தது.

இடைப்பட்ட நேரத்தில் எனது ஆதர்ச நிக்கான் கொண்டு கிளிக்கிய நிலா! (ஆயிரம் நிலாக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தாலும், என் மனதை மயக்கிய நிலாவினை…..

திருச்சிக்கு சென்ற பின் அங்கே நின்றிருந்த கூட்டத்தினை பார்த்து மலைத்து போய் நின்றிருந்த வேளையிலே “என்ன மச்சி நீயும் டிக்கெட் ரிசர்வ் பண்ணலையா?” என்று ஒரு குரல். திரும்பி பார்த்தால் நண்பன் ரீகன்!
ரீகன் உடனே, “இந்த கூட்டத்தில் இப்போ இடம் நமக்கு கிடைக்காது, வா “டீ” சாப்பிட்டுக்கொண்டு திட்டம் போடலாம் என்ன பண்றதுன்னு” என்று கூற.

டீ அருந்திக்கொண்டே மூன்று மணி நேர பயணத்துக்காக திட்டம் தயாரானது. அதிகாலை 04:30  மணிக்கு மைசூர் – மயிலாடுதுறை விரைவு வண்டியை பிடிக்கலாம் என்று. திட்டப்படியே விரைந்தோம். திருச்சி புகைவண்டி நிலையத்தில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை, அநேக இருக்கைகள் / படுக்கைகள் காலியாக நாங்கள் ரிசர்வ் பெட்டியில் ஏறி அமர்ந்தோம். வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில் வந்த டிக்கெட் பரிசோதகர் “தடங்கு தமிழில்” என்ன இங் எறி இருக்கு? உங் டிக்கெட் ஜெனரல் ல, கோ பேசஞ்சர்ஸ் கம்ப்ளைண்ட் பண்ணும” என்று கூற,

உடனே நானும் ரீகனும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் “வீ ஆர் நாட் கோயிங் டு ஹார்ம் எனி ஒன் ஹியர், சீட்ஸ் ஆர் வேகன்ட், இட் இஸ் அன் ஆப்பர்டுனிட்டி காஸ்ட் லாஸ் டு த ரயில்வே” “ஹம்கோ கொய் பிராப்ளம் நெஹிஹை பைன் பைசா பே கர்னேக்கா” என்று எங்களது ஆங்கில மற்றும் ஹிந்தி புலமையை காட்ட அவரோ, உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்கிறதே, பரவாயில்லை நீங்கள் அடுத்த பெட்டியில் நிறைய இடம் காலியாக இருக்கிறது நீங்கள் அங்கே சென்று வசதியாக இருங்கள் என்று ஹிந்தியில்  கூற. அப்பாடா என்று நிம்மதியாக உறங்க ஆரம்பித்தோம். நான் பேருந்திலேயே நன்றாக உறங்கியதால் எனக்கு தூக்கம் அவ்வளவாக வரவில்லை.. ஆனால் ரீகன்…

மாயவரம் அடைந்து அதே இரயிலில் வந்த எனது அக்காவின் கணவரை கண்டு அப்பா கொண்டு வந்திருந்த காப்பி அருந்திவிட்டு சிறுது நேரம் அளவளாவி வீட்டுக்கு செல்ல புறப்பட்டோம்.

குறிப்பு: காப்பி உடன் வந்திருந்த அக்காவின் கணவரை முன்னுறுத்தி அவரது மாமனார் அதாவது எனது திருத்தகப்பனார் கொண்டு வந்திருந்தார் (மாப்பிள்ளைக்காக காலையிலேயே தட்கால் டிக்கெட் புக் பண்ணவும்). நமெக்கெல்லாம் எங்கே! 😦

படிப்பினை: அதிகாலையில் நான்கு மணி முதல் புகை வண்டி திருச்சியில் இருந்து மாயவரம், கும்பகோணம் தஞ்சை செல்ல கிடைக்கும். பேருந்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் தைரியமாக ரெயில் நிலையம் சென்று முயற்சி செய்யலாம். கூடுதலாக ஹிந்தி அதாவது “ஹமாரா ராஷ்டிர பாஷா” தெரிந்திருக்கும் பட்சத்தில் நல்லதொரு அனுபவம் கிடைக்கப்பெறலாம்.

Advertisements