Tags

, , , , , ,

சமீபத்தில் திரு.கண்ணதாசன் அவரகளது புத்தகம் ஒன்று படித்தேன். புத்தகத்தின் பெயர் “குடும்ப சூத்திரம்”. அதில் அவர் கவிதையாய் கூறியது!

“காதல் என்பதை கண்ணால் மட்டும்

கூறும் பெண்ணே குலத்துக் கேற்றவள்!

பாதிக் கண்ணால் பார்க்கும் அழகி!

நீதிப் படியே நிலத்தைப் பார்ப்பவள்

பல்தெரி யாமல் பையச் சிரிப்பவள்

முந்தா னைதனை முழுக்க மறைத்தவள்

நீண்ட கூந்தல் நிறையப் பெற்றவள்

மல்லிகை முல்லை மலர்சூ டுபவள்

சாந்துப் பொட்டைத் தானணி கின்றவள்

நடுவகி டெடுத்த நங்கையர் திலகம்

இவளே, கற்பின் இல்லறப் பெண்மை!

நீண்ட கழுத்தும் நெருங்கிய காதும்

கூரிய மூக்கும் குனித்த புருவமும்

தாடை சற்றே சரிந்த நிலையும்

தன்கை இரண்டும் சதிரா டாமல்

முன்கை வளையலை மூடியும் இழுத்தும்

நாணிக் கவிழும் நங்கை சிறந்தவள்!

அத்தகு பெண்ணை அடைய விரும்பும்

காதல் மனதுக் காளையர் எவரும்

கடிதம் எழுதிக் கலவரம் செய்தால்

காலகா லங்கள் கடிமண மில்லை!”

புத்தக நடை எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கு கிடைத்தது மின் புத்தகம் தான். வேண்டுவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

புத்தகம் டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும்:

Advertisements