Tags

, ,

எனக்கு பெண்பார்க்கும் படலம் ஆரம்பித்து விட்டார்கள் போல! 😦 வழக்கம் போல் குழப்பமே மனதில் நீடித்து இருக்கிறது! இன்னும் ஒரு ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து சிந்திக்கலாமா என்று தோன்றுகிறது. இருக்கட்டும் என்று இந்த பதிவு!

காலையே எனது ஒன்று விட்ட (கன்னத்தில் அல்ல) சகோதரி தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க ஆரம்பித்துவிட்டாள். எனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க எங்கள் பந்துக்களிலேயே பெண் பார்க்கலாம் என்று திட்டம். என் தந்தை என்ன கூறுகிறாரோ அதுவே என் முடிவு! (மறு பரிசீலனை விவாதங்கள் உண்டு) பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

பொதுவாக எனக்கு ஜாதகம், பொருத்தம் இவற்றில் நம்பிக்கை இல்லை! என் சகோதரிகளுக்கு வரன் பார்க்கும் போது நாங்கள் விவாதித்த விஷயங்கள் பல நினைவிற்கு வருகிறது. என் அத்திம்பேர் இருவருமே நல்ல “பையன்கள்” எனும் வரையறைக்குள் வருபவர்கள். நானும் அவ்விதமே என்று நினைக்கிறேன்!

இல்லற வாழ்விற்கு இன்றியமையாதது நல்ல மற்றும் ஒத்த கருத்துணர்வு மற்றும் சிந்தனை மட்டுமே.

நீண்ட சிந்தனைக்குப்பின் இந்த பதிவினை பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து எழுதுகிறேன். இந்த பதிவு  பெண் மற்றும் பெண்ணை பெற்றோர் படித்து அறிந்து கொள்ளவே! (ஒரு விதத்தில் பார்த்தால் ‘என்’ குடும்பத்தினருக்கும்)

 1. எனது தொழில் மற்றும் செயல்பாடுகள் பற்றி சுலபமாக கூகிளில் தேடுவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். (உம்:search: Raman Azhahia Manavalan in Google)
 2. என்னைப்பற்றி இன்னும் அதிகமாக அறிய மிகவும் சுலபம் எனது சகோதரிகளை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கேட்டு அறியலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் எனது தந்தையிடம் இருந்து பெறலாம்.
 3. எனது நிதி நிலைமை, வருங்கால திட்டம், எங்கள் நிறுவனம் பற்றிய விபரங்கள் நேரிடையாக என்னையே தொடர்புகொண்டு பெறலாம். (என்னை தொடர்பு கொள்ளுதல் என்பது கடைசியான செயல்பாடாக இருந்தால் நன்று, முதலில் என் குடும்பத்தினரை பற்றி அறிதல் அவசியம்) என்னைப்பொறுத்தவரையில் பரஸ்பர புரிதல் முக்கியம்.
 4. கண்டிப்பாக தனியான ஒரு ஜாதக விபர அறிக்கை தரப்படமாட்டாது. இது பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டே கூறுகிறேன்.
 5. என் புகைப்படம் முதலான இன்ன பிற சமாச்சாரங்கள் இன்டர்நெட்டில் உள்ளது (Linked In, Face Book, Twitter ) பார்த்துக்கொள்ளலாம்.
 6. பிடித்திருந்து (இரு வீட்டிற்கும், என் சகோதரிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும்) அடுத்த கட்டம் போவதற்கு முன் நான் அந்த பெண்ணிடம் குறைந்தது மூன்று முறை நேரடியான சந்திப்பு அவசியம். (இதற்கு முன் அவ(ர்க)ளது பெற்றோரும் என் பெற்றோரும் ஒரு முறை சந்தித்தால் நன்று)
 7. நேரடியான சந்திப்பிற்கு பின் குறைந்தது ஐந்து முதல் பத்து மாதங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், தொலைபேசி, இணையம், நேரடியான சந்திப்புக்கள் அவசியம்.
 8. எனவே குறைந்தது ஒரு வருட காலம் புரிதல், பழகுதல் அவசியம். (இவையனைத்துமே இருவீட்டார் சம்மதம் (திருமணத்திற்கான), பெண்ணின் விருப்பம் (பொதுவான) பெற்ற பின்னரே.
 9. இவையெல்லாம் கண்டிஷன்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
 10. வரதட்சிணை வாங்கிக்கொள்ளப்பட மாட்டாது! (மீறி கொடுத்தால் வழக்கு பதிவு செய்யப்படும்!!! ஹா ஹா ஹா ! என்ன கொடுமைடா இது!) என் பெற்றோரின் விருப்பமும் அதுவே!
 11. பெண்ணிற்கு அலுவல் செல்லும் விருப்பம் வேண்டும். அவர்களது தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் வண்ணம் இருத்தல் நலம். (நேரில் சந்திக்கும் போது இதுபற்றிய விவாதம் உண்டு).
 12. என்னுடனான உரையாடல்கள், விபரங்கள் அனைத்துமே குடும்ப நலன் கருதி மிகவும் ரகசியம் பேணவேண்டியது அவசியம். (குழப்பம் வேண்டாம்! என்பதற்காகவே!)
 13. எல்லாவற்றிக்கும் மேலாக என் வாழ்க்கை முழுவதும் உடன் வருபவர் பற்றி நானும் அறிய வழி வகை செய்ய வேண்டும்.
 14. சம்பத்தப்பட்ட பெண்ணும் இதே போன்று விருப்பங்களை பட்டியலிட்டு எனது பிரத்யேக மெயில் ஐடிக்கு அனுப்பலாம். தனி நபர் ரகசியம் காக்கப்படும்!!! 🙂      << manoigr@gmail.com >> விருப்பம் இருந்தால் அலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம். (+91-9486467049)
 15. இந்த பட்டியலும், பதிவும் தொடரும்…

என்றும் அன்புடன்

இராமன் அழகிய மணவாளன்.

Advertisements