Tags

, , ,

சினிமா சில பேரை வாழ வைத்திருக்கிறது, பலரை வீழவைத்திருக்கிறது. இருந்தாலும் இந்த மாயவெளிச்சத்தில் விழ பல விட்டில் பூச்சிகள் தயாராகத்தான் இருக்கின்றன. சமீப காலமாக பவர் ஸ்டார் என்றொரு பெயரில் ஒரு நாயகன்! அவரை விமர்சிக்க, நக்கலடிக்க அல்லது அவரது விசிறிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம்.

நல்லது! எனது பதிவு அவரைப்பற்றி அல்ல அவரது தொழில் நடிப்பது சேவை செய்வது, செய்யட்டுமே அவர்! நான் இங்கே பேச இருப்பது நம்மைப்பற்றி நாம் எவ்விதம் எடுத்துக்கொள்கிறோம் இது போன்ற விஷயங்களை என்பது தான்.

முதலில், சினிமாவின் ஹீரோ அல்லது ஹீரோயின் என்பது உளவியல் ரீதியாக “ஆல்டர் ஈகோ” எனப்படுவதே ஆகும். நாம் எவ்விதம் இருக்க வேண்டும் என்ற ஆசையை திரையில் வரும் ஹீரோவினை பார்த்து நம் மனதினை சமாதானப்படுத்திக்கொள்கிறோம். அழகில்லாத ஹீரோவினை வெறுப்பதும், அழகான ஹீரோயினை ஆராதிப்பதும் இதே அடிப்படையில் தான். என்பது என் கருத்து. விவாதிக்க / கருத்துக்கு வலு சேர்க்கவும்!

பவர் ஸ்டார் நிழல் ஹீரோக்களைப் போல் இல்லாமல் தொப்பையும், சொட்டையுமாக இருப்பதை நமது ஆல்டர் ஈகோ ஏற்க மறுக்கிறது அவ்வளவே!\

என்னைப்பொருத்த வரையில் பவர் ஸ்டாரினை நான் பாராட்டுகிறேன்! சுய விளம்பரமோ, செல்லாக்காசோ! தன்னம்பிக்கையாக, எவ்வித அவசரத்திற்குள்ளாகாமல் நேர்த்தியாக மீடியாவினை கையாள்வதால்.

இதை கடந்த மாதம் நண்பர் ஒருவரிடம் விவாதித்தேன்! தற்போது இங்கே பதிவிடுகிரேன்.

Advertisements