நண்பர்களுக்கு வணக்கம்,

ஏறத்தாழ ஒரு மூன்று மாதங்களாக எனது மானசீக குரு, நல்வழிகாட்டி திரு. கண்ணன் அவர்களின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் “We the Immortals – The Science of God” என்ற பதிவினை தொடர்ச்சியாக வெளியிட்டு அவரது அனுபவம் மற்றம் தத்துவ விபரங்களை கலந்துரையாடி தொகுத்து அளிக்கும்பணியில் என்னை அர்ப்பணித்திருந்தேன். வலைப்பூ இன்னும் பலரை சென்று சேர வேண்டும் என்ற காரணத்தினால் ஆங்கிலத்தில் பதிவிடப்படும் கட்டுரை இங்கே தமிழில் பதிவிட திட்டமிட்டிருக்கிறேன். குறிப்பாக கேள்வி பதில் போல அல்லது விவாத களமாகவோ கருத்துக்களை செம்மைப்படுத்த திட்டம்.

தங்களது மேலான ஆதரவினை தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆங்கில வலைப்பூவினை தமிழில் பதிவிடும் முயற்சிக்க தங்களுக்கு விருப்பம் இருப்பின் தயை கூர்ந்து தொடர்பு கொள்ளுங்கள்.

Advertisements