நேற்று எதோ காரசார பதிவில் தமிழ்ஹிந்து பகிர்ந்த கட்டுரையில் இருந்த சுட்டி மூலம் சிதம்பரநாதன் என்ற கம்யுனிச எழுத்தாளரது ஒரு கதையை படிக்க நேர்ந்தேன். ஐம்பதுகளில் நடந்த நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதித்த அரசின் கொள்கையை அடிப்படையாக கொண்ட நாவல்.

இன்றும் அதே தவறான ஜவுளிக்கொள்கையால் எண்ணற்ற தொழிலாளர்களையும், வேலைவாய்ப்புகளையும் தொழில்துறையை முடக்கும் நிலை நீடித்திருப்பது சொல்லொணாத்துயரத்தை தருகிறது.

கட்டுரையின் சுட்டியை இங்கே இணைத்துள்ளேன்.
விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். கொஞ்சம் சுவாரஸ்யம் தான் என்றாலும் எண்பதுகளின் நாவல் நடை கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது. உவமைகள் அருமை… கதை எழுதியவர் மீதான ஈர்ப்பு கொஞ்சம் கூட இல்லை எனக்கு ஒரு வேளை திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களின் பதிவின் (குழைந்தையை பாட்டாளிக்காக கொன்ற கதைக்களம்) பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

தனிப்பட்ட முறையில் கம்யுனிஸ சிந்தாந்தத்தின் மீதான நம்பிக்க முற்றிலும் அறுபட்ட நிலையில் இருக்கும் எனக்கு இந்த நாவலின் மீதான விருப்பம் ஏற்பட காரணம் கதைக்களம் “ஜவுளித்தொழில்” சார்ந்த ஒன்றாக இருப்பது என்றே நினைக்கிறேன்.

Advertisements